மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து - பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய விவசாயிகள் :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித் ததையொட்டி நேற்று தஞ்சாவூ ரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு களை வழங்கி கொண்டாடப் பட்டது.

தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே அகில இந்திய விவசாயி கள் போராட்டக் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் சி.மகேந்திரன், ஜி.பழனிச் சாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வீரமோகன், பா.பாலசுந்தரம், காளியப்பன், முத்து.உத்திராபதி, வெ.ஜீவக்குமார், சி.சந்திரகுமார், துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோக நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கும்பகோணம் தலைமை அஞ் சலகம் முன்பு மாவட்டச் செயலா ளர் மு.அ.பாரதி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், பந்தநல்லூர் கடைவீதியில் விவசா யிகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் க.பாலகுரு தலைமையில் விவசாயிகளும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண் டாடினர்.

மன்னார்குடி தேரடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் உள் ளிட்டோர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கீரமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அரியலூர் பேருந்து நிலையம் முன்பு காவிரி டெல்டா பாசன சங்க கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன் தலைமையில், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பெரியசாமி உள் ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்