திருப்பூர், அவிநாசி உணவகங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை :

By செய்திப்பிரிவு

திருப்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள உணவகம், லட்சுமி நகர் மற்றும் அவிநாசியில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் அதன் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்துவது தொடர்பாக கோவை மண்டல ஜிஎஸ்டிநுண்பிரிவு அதிகாரிகள் குழு நேற்று ஆய்வு செய்தனர். மேற்கண்ட இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது 3 உணவகங்களின் வெளிப்புறம் மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு உணவகங்களிலும் 5 முதல் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். உணவகத்தின் கணக்கு வழக்குகள் குறித்தும் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்கு பிறகு, ஜிஎஸ்டி கணக்குகள் குறித்த ஆவணங்களை கொண்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்