சென்னை - பெங்களூர் விரைவு சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள் பெரும்புதூர் அருகே நெமிலி, ஆரியம்பாக்கத்தில் நடைபெற்றன. அப்போது அங்கு வீட்டுமனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இடங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.
அந்த இழப்பீடு வழங்கும் போதுவீட்டுமனைகளை வாங்கியவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கவேண்டும். அந்த வீட்டுமனை பிரிக்கும்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்ட சாலை,பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2,24,016 சதுர அடி இடத்தை போலியாக சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்பதுபோன்ற பத்திரப் பதிவுகள் நடைபெற்றன.
இதைத் பயன்படுத்தி அரசுக்கு சொந்தமான அந்த இடத்துக்கு சென்னை - பெங்களூர் விரைவு சாலைக்கு இழப்பீடு பெறும்போது பல கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்என்றும், ஆட்சியர் விசாரணை அதிகாரியை நியமித்து, அவர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணைஅதிகாரியாக பெரும்புதூர்கோட்டாட்சியர் சைலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்த மோசடி ரூ.300 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago