கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை - வானதிராயபுரத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது : 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் நெய்வேலி அருகே பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்தது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லேசான காற்று வீசியதால் சிதம் பரம் எஸ்ஆர் நகர், முத்தையா நகர், குமராட்சி அருகே உள்ள ஒட்டரப்பாளையம் உள்ளிட்ட பலபகுதிகளில் மரங்கள் விழுந்துள் ளன. மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டன. மாவட் டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மாவட் டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள வானதிராயபுரம் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடித்து விழுந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் யாருக் கும் பாதிப்பு ஏற்படவில்லை. நெய்வேலி தெர்மல் போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. கடலூர் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மழையளவு: தொழு தூரில் 67 மிமீ, மேமாத்தூரில் 60மிமீ, கடலூரில் 48.6 மிமீ, வேப்பூரில் 45 மிமீ, பரங்கிப்பேட்டையில் 42.8 மிமீ, விருத்தாசலத்தில் 41 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 40.3 மிமீ, சிதம்பரத்தில் 34.6 மிமீ, அண்ணாமலைநகரில் 30.8 மிமீ, முஷ்ணத்தில் 29.3 மிமீ, புவனகிரியில் 26 மிமீ, பண்ருட்டியில் 20 மிமீ மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்