தொடர் மழையால் உயரும் காய்கறி விலை :

By செய்திப்பிரிவு

கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக தக் காளி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சியில் மார்க்கெட் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

பண்ருட்டி முக்கிய காய்கறி கொள்முதல் மார்க்கெட். மழை காரணமாக சாலையோர வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கொள்முதல் செய்ய வரவில்லை.

விருத்தாசலத்தில் நேற்றுஅதிகாலை முதல் மிதமானமழைபெய்ததால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடைவிடாது தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பியுள்ளன. மழைநீர் சாலைக ளிலும் வாய்க்கால்களிலும் பெருக் கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பி.என். தர் நேற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய பகுதிகளை பார்வையிட்டார். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் எவரும் நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.80 முதல் 90 வரையும், ஜாம் தக்காளி ரூ.120 வரையும், 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கத்தரி ஒரு கிலோ ரூ.90 முதல் 100 வரையும், பீன்ஸ் ரூ.40 முதல் 60 வரையும், கேரட் ரூ.30-க்கும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்