தூத்துக்குடி அருகேயுள்ள வரதராஜபுரம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஜெயசெல்வின் இன்பராஜ் பண்ணைப்பள்ளி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார்.
ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தின் உழவியல் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் முருகன், உளுந்து விதை நேர்த்தி செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் காளிராஜ் அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 25 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago