தொடர் மழையால் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் - நாமக்கல் அருகே தூசூர், பழையபாளையம் ஏரிகள் நிரம்பின :

By செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே தூசூரில் 600 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இதன் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஏரி வானம் பார்த்த பூமியாய் காட்சியளித்து வந்தது.

இதனால், பாசன விவசாய நிலங்களில் சாகுபடியும் கேள்விக் குறியாகின. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூசூர் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கொல்லிமலையில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், ஏரி நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து நேற்று முன்தினம் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. மேலும், ஓரிரு நாட்களில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, ஏரியின் மேல் பகுதி யில் உள்ள பழைய பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியும் அதன் முழுக் கொள்ளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.

கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு ஏரிகளும் நிரம்பி இருப்ப தால், பாசன விவசா யிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

அதே வேளையில் இரு ஏரிகளின் நீர் தேக்கப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை வரும் காலங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அகற்றி ஏரியில் மழைக்காலங்களில் நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்