சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் - பழுதான வாகனங்களில் பயணம் செய்யாதீர்! : போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தல்

ஐயப்ப பக்தர்கள் பழுதுள்ள, தகு திச்சான்றில்லாத வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் வாரத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து மிகவும் அதிகமான பக்தர்கள் வருடந்தோறும் சபரிமலைக்கு செல்கின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செல்லும் போது பல்வேறு தருணங்களில் சாலையில் விபத்து ஏற்படுவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது சரக்கு வாகனங்கள், திறந்தவெளி லாரிகள் மற்றும் இயந்திர பழுதுள்ள வாகனங்களை பயன்படுத்து வதாகும்.

வாகன ஓட்டுநர்கள் சரியான ஓய்வின்றி வாகனம் ஓட்டுவதாலும் இந்த விபத்துக்குள் ஏற்படுகின்றன. சரக்கு வாகனங்கள், திறந்தவெளி லாரிகள், இயந்திர பழுதுள்ள வாகனங்கள் மற்றும் தகுதிச் சான்றில்லாத வாகனங்களை சாலைகளில் பயன்படுத்துவது ஆபத்தானது மட்டுமின்றி, சாலை விதிகளுக்கு புறம்பானதும், தண்டனைக்குறியதும் ஆகும்.

எனவே வாகன உரிமை யாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் (டிராவல் ஏஜெண்ட்) மற்றும் ஓட்டுநர்கள் மேற்கூறிய வகையான வாகனங்களில் பக்தர்களை ஏற்றிச் செல்லக் கூடாது.

மீறினால் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்