தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேர வேலை :

தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும்போதே மாணவிகள் பகுதிநேரமாகப் பணிபுரியும் வகையில் தனியார் நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்திலேயே வேலை செய்யும் வசதி செய்யப் பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும், திருச்சி வர்னிக் சிஸ்டம் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து மேற் கொண்டுள்ளன.

கேரளா கட்டப்பனா செயின்ட் ஜோசப் மருத்துவமனை டாக்டர் ஏ.வேல்முருகன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் எஸ்.சித்ரா வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் கே.பி.ஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜ் மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், கல்லூரி இணைச் செயலாளர்கள் கே.வன்னிய ராஜன், கே.சுப்புராஜ், விடுதிச் செயலாளர் கே.கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற 10 மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்கள் தினமும் வகுப்பு முடிந்ததும் குறிப்பிட்ட நேரம் பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் கே.சிவ காமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE