தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

By செய்திப்பிரிவு

தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் வருவாய்த் துறை சார்பில் பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் 73 பயனாளிகளுக்கு ரூ.8.95 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.88 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 12 புதிய மின்மாற்றிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். 16 பேருக்கு விவசாய மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். சிமென்ட் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் ‘வலிமை’ என்ற பெயரில் அரசு சிமெண்ட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE