சிவகங்கை மாவட்டம், காளை யார்கோவில் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூடிக் கிடந்ததை கண் டித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்த நிலை யில் விவசாயிகள் சாகுபடிப் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இதையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம், பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. மறவமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மறவமங்கலம், உசிலங்குளம், வேளாரேந்தல், சிரமம், முடிக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அச்சங்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிக ளுக்கு உரங்கள் வழங்குவதற் கான டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால் விவசாயிகள் உரம் வாங்கச் சென்றபோது கூட்டுறவு சங்கம் மூடிக் கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பரமக்குடி-காரைக்குடி நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் பால கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சமரசப்படுத்தினர்.
தொடர்ந்து கூட்டுறவு சங்க செயலாளர் மணிவாசகத்திடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சங் கத்தில் 41 யூரியா மூட்டைகள் மட் டுமே இருப்பில் உள்ளன. மேலும் இன்று (நேற்று) வர வேண்டிய உர மூட்டைகள் வரவில்லை. அதனால் தான் சங்கத்தை திறக்கவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து உடனே தேவையான உர மூட்டைகள் அனுப்புவதாக அதி காரிகள் உறுதி கூறினர்.
இதேபோல் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்திலும் உர மூட்டைகள் இன்றி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago