தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் சாஸ்த்ரா பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் :

தஞ்சாவூர்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் திருச்சியில் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகமும் அறிவு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு நிலைகளை மேம்படுத்த இணைந்து செயல்படுவதென முடிவு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் எஸ்.உமா மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஆர்.சந்திரமவுலி ஆகியோர் நேற்று முன்தினம் தேசிய வாழை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு, பரிமாறிக்கொண்டனர்.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, வாழை உற்பத்தியை அதிகப்படுத்த துல்லிய பண்ணையம், உயிரி தொழில் நுட்பம், நானோ தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்த இருநிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE