திருச்சி மாவட்டம் சங்கமரெட்டி பட்டியில் பள்ளிக்குச் செல்ல ஆற்றையும், சேறும்- சகதியுமான மண் சாலையையும் கிராம மாணவ- மாணவிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மணப்பாறை அருகே உள்ளது சங்கமரெட்டிபட்டி. இந்த கிராமம் மணப்பாறை நகராட் சிக்குட்பட்டதாக இருந்தாலும், தனித்துவிடப்பட்ட பகுதியாகவே உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிக்கு அருகில் உள்ள செவலூர், மணப்பாறை, குதிரைகுத்திப்பட்டி, ஆளிப்பட்டி, மாகாளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்தநிலையில், தற்போது பெய்த மழையால் இப்பகுதியில் உள்ள உப்பாற்றில் தண்ணீர் ஓடுகிறது. ஆனால், உப்பாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந் துள்ளதால், இப்பகுதி மாணவ, மாணவிகள் ஆற்றில் இறங்கி நடந்து ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
சேறும், சகதியுமான சாலை
மேலும், இங்கிருந்து செவலூர்– வீரப்பூர் பிரதான சாலையை அடைய 1 கிமீ தொலைவுக்கு சேறும், சகதியுமான மண் சாலையில் நடந்து செல்ல வேண் டியுள்ளது.ஆறு ஓடும் பகுதி நகராட்சியிலும், சேறும், சகதியுமான மண் சாலை தொப்பம்பட்டி ஊராட்சி யிலும் வருகின்றன. மழைக் காலங் களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அனுபவிக்கும் சிரமங் களைக்களையும் வகையில் ஆற்றைக் கடக்க பாலமும், மண் சாலையை சீரமைத்து தார் சாலையும் அமைக்க வேண்டும் என்று கோருகின்றனர் அந்த கிராம மக்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago