ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் அடுத்த வாரம் இறுதி செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: ஆசிரியர் பணியிட பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் அடுத்த வாரத்தில் இறுதி செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு முதல்வரின் கவனத் துக்குக் கொண்டு சென்று கலந்தாலோசித்து கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, நவ.19-ம் தேதி சென்னை யில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம்.
இதில், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
போக்ஸோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் ஏற்கெ னவே அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு நடத்தப்பட்டுள்ள நிலை யில், தனியார் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வு குறைவா கவே உள்ளது. பள்ளிகள் முழுமை யாக திறக்கப்பட்ட பிறகு, இது குறித்து நடவடிக்கை மேற்கொள் ளப்படவுள்ளது.
தமிழகத்தில் சேதமடைந்த மற்றும் மழையால் பாதிக்கப்பட் டுள்ள பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கு மாறு அந்தந்த மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மிக மோச மான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ஷேக் முஜிப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago