திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் - ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும் : தி.மலை எம்.பி., அண்ணாதுரை தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும் என திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கூறினார்.

இது குறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு பல்வேறு நலத் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தி.மலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார் பேட்டை ரயில் நிலையங்களை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 2 ரயில் நிலையங்களில், ரயில்வே மேம்பாட்டு பணிகள், ரயில் பயணிகள் தங்கும் நவீன அறைகள், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் கூட்ஸ் ரயில் யார்டு பகுதி நவீன முறையில் உருவாக்கப்படும். கூட்ஸ் ரயில் பணிமனை விரிவுபடுத்தப்பட்டு நவீன இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்பட நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏராளமான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறலாம். திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலை யங்களில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே அதிகாரி களிடம் கோரிக்கை மனு வழங் கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்