திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 20 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்து, மாநகராட்சி இடத்தை மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 60-வதுவார்டுக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில்மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, திருமணமண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையருக்கு புகார் சென்றது.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி உத்தரவின்பேரில், 4-வது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி இடம் ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டப்பட்டது தெரியவந்ததால், போலீஸ் பாதுகாப்புடன் மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது ‘‘கடந்த 20 ஆண்டுகளாக மாநகராட்சி இடத்தில் மண்டபம் கட்டி, டிரஸ்ட் போன்று ஏற்படுத்தி சுயநலமாக சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே மண்டபத்தை காலி செய்து தரும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் காலி செய்யாததால், மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago