உத்திரமேரூர் அருகே தானிய சேமிப்பு கிடங்கு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் வேடப்பாளையம் கிராமத்தில் ரூ.2.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். உத்திரமேரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இந்த கிடங்கை தொடங்கி வைத்தார்.

உத்திரமேரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெறும். எனவே அங்கு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் 500 மெட்ரிக் டன் மற்றும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டன. அந்த கிடங்குகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உத்திரமேரூர் அருகே உள்ள வேடப்பாளையத்தில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்