விழுப்புரம் மாவட்டம் தளவானூ ருக்கும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலத்திற்கும் இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடி செலவில் கடந்த ஆட்சியில் தடுப்பணைக் கட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தளவானூ ரில் 3 மதகுகளுடனும், கடலூர் மாவட்டம் ஏனதிரிமங்கலத்தில் 3 மதகுகளுடனும் 10 அடி உயரத்திற்கு இந்த தடுப்பணைக் கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட ஒரே மாதத்தில்கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலத்தில் உள்ள தடுப்பணை மதகுகள் உடைந்து விழுந்தன. தொடர்ந்து கடந்த 9-ம்தேதி 2வது முறையாக உடைப்பு ஏற்பட்டது. மதகுகள் அருகே உள்ள மண்கரைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. இதற்கிடையே, சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வயல் வெளியில் வெள்ளம் புகும் நிலை உருவானது.
இந்நிலையில் ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் தளவானூர் தடுப்பணை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தண்ணீ ரில் விழுந்த இடிபாடுகளை அகற்றுவதற்காக நேற்று பொதுப்பணித்துறையினர் 3 மிதவை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்தனர்.ஒரு இயந்திரத்தை தண்ணீரில்இறக்கி இடிபாட்டு பகுதிக்கு அனுப்பினர். மேலும் 2 இயந்திரங் களை கரை மேல்பகுதியில் நிறுத்தி, தண்ணீரில் உள்ள ஜேசிபி இயந்திரத்தை ரோப் மூலம் பாதுகாத்தனர். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இடிபாடுகளை அகற்றுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மிதவை ஜேசிபி தண்ணீரிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago