கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளின் செயல்பாட்டைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் இடமாற்றம் செய்த தொழிலாளிகளை மீண்டும் பணி செய்த இடத்திலேயே இடமாறுதல் வழங்க கோரியும், பழிவாங்கப்பட்ட தொழிலாளிகளுக்கு விசாரணை முடிந்த பிறகும் ஆணை வழங்கப்படாமல் ‘இன்கிரிமெண்ட்’ உள்ளிட்டவைகள் வழங்காமல் இருப்பதை கண்டித்தும், குடும்பத்துடன் பெருந்திரள் முறையீடு போராட்டம் சிஐடியூ போக்குவரத்து சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்டது. இதில், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்கள் கடலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்ததால் போலீஸாருக்கும் ,போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீஸார் சமாதானப்படுத்தி, கடலூர் மண்டல பொது மேலாளர் அறைக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago