தூத்துக்குடி மாவட்ட பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் சார்பாக காமராஜ் கல்லூரி வளாகத்தில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க தேசியத் தலைவர் ப.காளிதாசன் தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) க.சுந்தரலிங்கம் காசநோய் குறித்து பேசினார். காரைக்கால் ஜிப்மர் மருத்துவர் எம்.பாலமுருகன் ரத்தசோகை குறித்து எடுத்துரைத்தார். டெல்லி என்ஏபிஎல் ஆய்வக தரக்கட்டுப்பாட்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்.வெங்கடேஸ்வரன், ஆய்வக நுட்பநர்களுக்கு காணொலி காட்சி மூலம் ஆய்வக தரக்கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்தார். விழாவில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வக நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
மருந்தகங்களில் ரத்தப் பரிசோதனை செய்வதை தடை செய்ய வேண்டும். ஆய்வக நுட்புனர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெறப்படாத மருத்துவ ஆய்வக கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய ஆய்வக நுட்புனர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம். அபி ராமகிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் பிரதீப், பொருளாளர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago