வேலூர் மாவட்டத்தில் கனமழையால் - 433.83 ஹெக்டேர் பயிர்கள் சேதம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்குபருவமழையால் 1,072 விவசாயிகளுக்குச் சொந்தமான 433.83 ஹெக்டேர் பயிர்கள் சேத மடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் தாழ்வானப் பகுதிகளில் நீரில் மூழ்கியதுடன் விவசாய நிலங்களில் பயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, மழைச்சேத பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், வேலூர் மாவட்ட அளவில் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை மழையின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 கால்நடைகள், குடியாத்தம் வட்டத்தில் 2,700 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 231 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதியாகவும், 27 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அதிகளவில் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வேளாண்துறை கணக்கெடுப்பு

வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப் பின்படி மொத்தம் 1,072 விவசாயிகளுக்குச் சொந்தமான 433.83 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்