கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யமுயன்றபோது விஷவாயு தாக்கியசம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பூர் வித்யாலயம் கொத்துக்காட்டில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாய ஆலை உள்ளது. சாயக் கழிவுநீர் தேங்கும் 8 அடி ஆழமுள்ள இரு தரைதள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று முன் தினம் நடந்தது.

பழவஞ்சி பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் (32), நாகராஜ்(48), ராமகிருஷ்ணன் (50), ராஜேந்திரன் (55), பெண் தொழிலாளி ராமு(32) ஆகியோர் சுத்தம் செய்யும்பணியில் ஈடுபட்டனர்.

சாய ஆலையின் மேலாளர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் (28) மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன.

தொட்டியின் மூடியை திறந்தபோது, வடிவேலுவும், அருகில்நின்ற மேலாளர் தினேஷ்பாண்டியனும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் மயக்கமடைந்தனர். தகவலறிந்து விரைந்துசென்ற வீரபாண்டி போலீஸார் மற்றும்திருப்பூர் தெற்கு தீயணைப்புதுறையினர் 4 பேரையும் மீட்டு,திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். சாய ஆலையில் பிட்டராக பணியாற்றிவந்த ராஜேந்திரன்(55), மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

நாகராஜ் திருப்பூர் பல்லடம்சாலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்,சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமியை (48) வீரபாண்டி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணைஇயக்குநர்இயக்குநர் புகழேந்திதலைமையிலான அதிகாரிகள் கொத்துகாட்டில் உள்ள சாய ஆலையை நேற்று 2-ம் நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்த குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘சாய ஆலையில்2 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கையை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்