கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - சிறார் திருமணத்தை தடுப்போம் : குழந்தைகள் தின விழாவில் உறுதியேற்பு

By செய்திப்பிரிவு

குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.என்.தருக்கு ரக்ஷ்பந்தன் ராக்கியினை குழந்தைகள் கட்டி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது:

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தை ஒட்டி ‘சைல்டு லைன் 1098’ சார்பில் நவம்பர் 14 முதல் நவம்பர் 19 வரை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள் நண்பர்கள் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குழந்தைகள் நண்பர்கள் வார நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அரசு அலுவலர்களுக்கு ரக்ஷா பந்தன் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ‘குழந்தை திருமணத்தை ஒழிப்போம்’ கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளினை இலக்காக கொண்டு கொண்டாடப்படும். இந்த ஆண்டு குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிப்பதை இலக்காக கொண்டு இவ்வார விழா கொண்டாடப்படுகிறது.

குழந்தை திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல், திறந்தவெளி பிரச்சாரங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் வாரம் முழுவதும் நடத்தப்படவுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்