மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாம், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நேற்று தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வை புறக்கணித்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தப்பட்டதால் செமஸ்டர் தேர்வையும் ஆன்லைனிலேயே நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆன்லைன் தேர்வை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
கல்லூரி கல்வி இயக்குநரிடம் பேசி, கோரிக்கையை பரிசீலிக்கலாம் என ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்கள் போராட்டத்தால் மதுரை நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago