தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, இன்று (நவ.16) தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளது:
தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, இன்று (நவ.16) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் வித்யாலட்சுமி இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
முகாமுக்கு வரும் மாணவர்கள், 10-ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு (தந்தை மற்றும் மாணவர்), கலந்தாய்வு ஒதுக்கீடு கடிதம், கல்லூரி உறுதிச் சான்றிதழ், கல்லூரி கட்டணச் சான்று, பான் கார்டு, (தந்தை மற்றும் மாணவர்), புகைப்படம் (தந்தை மற்றும் மாணவர்) ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இந்த முகாமை தொடர்ந்து, பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கல்விக் கடன் முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago