தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இணை இயக்குநர் கடந்த 9-ம் தேதி தான் அறிவித்தார். அறிவித்த 5 நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு செய்வதில் சிரமம்உள்ளது. மேலும், பயிர் அடங்கல்வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, உளுந்துபயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான டி.ஏ.பி., யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் மணி தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர்கே.பி.ஆறுமுகம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.துணைத் தலைவர்கள் சீனிவாசன், ராகவன் பங்கேற் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago