குளத்தில் கட்டப்பட்டுள்ள : அரசு கட்டிடத்தை முழுவதுமாக அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

திருப்பூர் ஆண்டிபாளையம் சிறிய குளத்தின் அருகே மாநகராட்சி சார்பில் ரு.29 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் பாதிப்பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வந்தமழையால் அரை அடி ஆழத்துக்கு இக்கட்டிடம்மண்ணில் புதைந்தது. இதை மாநகராட்சி ஆணையர்கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு, கட்டிடத்தைஇடிக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து அக்கட்டிடத்தின் பாதி பகுதி மட்டும் இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த கட்டிடத்தை முழுவதுமாக அகற்ற வேண்டும். புதிதாக கட்டிடம் கட்டக் கூடாது. நீராதாரங்களை பாதுகாக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் குளத்தின் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்