நீலகிரி மலை ரயிலில் மேம்படுத்த வேண்டியபணிகள் குறித்து ரயில்வே சேவை வாரிய உறுப்பினர்கள் சிவராஜ் ஹெக்டே, பபிதா, பிரணாப் பர்னா, ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உட்பட 40 பேர் கொண்ட குழுவினர், குன்னூர் மற்றும் உதகை ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக வாரிய உறுப்பினர் பொன்.பாலகணபதி கூறும்போது, ‘‘சேலம் கோட்டத்தில், 275 ரயில்கள் சாதாரண ரயில்களாக இயக்கப்பட உள்ளன. நீலகிரி மலை ரயில் இன்ஜினை இயக்குவதற்கான தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுகுறித்து வலியுறுத்தப்படும். குறைந்த கட்டணம்நிர்ணயிக்க, நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்திடம் தெரிவித்து தீர்வு காணப்படும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago