செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,795 இடங்களில் வாக்காளர் சேர்ப்புமுகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நவ.13, 14-ம் தேதி (நேற்று மற்றும் நேற்று முன்தினம்) மற்றும் 27, 28-ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்குமென அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக 2,795 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5:30 மணி வரை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
மேலும் 2022 ஜன. 1-ம்தேதி நிலவரப்படி, 18 வயதுபூர்த்தியான நபர்கள், வாக்காளராக இணைய விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கான, விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. வாக்காளர், தகுந்த ஆதார ஆவண நகல்களுடன், படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட படிவங்களை அலுவலர்கள் பெற்று கொண்டனர்.
இதுதவிர, ஆன்லைன் மூலம், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம் நடைபெற்ற நாட்களில், நகரப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago