கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி :

கடலூர் மவட்டத்தில் நேற்று பல இடங்களில் வீடுகளுக்கே நேரில் சென்ற கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் புதுப்பாளையம் 19-வது வார்டு மசூதி தெரு மற்றும் 20-வது வார்டு சுப்ரமணிய கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் கரோனா தடுப்பூசி செலுத்தியதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் கடந்த 12.09.2021 அன்று 88,190 நபர்களுக்கும், 19.09.2021 அன்று 55,092 நபர்களுக்கும், 29.09.2021 அன்று 1,15,590 நபர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதே போல் 3.10.2021 அன்று 93 ஆயிரத்து 594 நபர்களுக்கும், 10.10.2021 அன்று 89 ஆயிரத்து62 நபர்களுக்கும், 23.10.2021 அன்று 91,563 நபர்களுக்கும், 30.10.2021 அன்று 98,619 நபர்களுக்கும் ஆகிய ஏழு கட்டங்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 8-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 907 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப் பட்டது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்