சிவகங்கை அருகே விவசாயிகள் புகாரால் - பூட்டியிருந்த கூட்டுறவு சங்கத்தை திறந்த அதிகாரிகள் :

சிவகங்கை அருகே விவசாயிகள் புகாரையடுத்து பூட்டிக்கிடந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அதிகாரிகள் திறந்தனர்.

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அல்லூர், பனங்காடி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீடு செய்ய இன்று (நவ.15) கடைசிநாள் என்ப தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நவ.13 மற்றும் 14-ம் தேதி செயல்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்தது. இதையடுத்து பயிர் காப்பீடு செய்ய நேற்று காலை நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விவசாயிகள் சென்றனர். ஆனால் கூட்டுறவு சங்கம் பூட்டியிருந்தது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பகல் 12 மணிக்கு பிறகு கூட்டுறவு சங்கத்தை அதிகாரிகள் திறந்தனர். மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறாத விவசாயிகளுக்கு காப்பீடு பதிவு செய்ய முடியாது என தெரிவித்ததால், அவர்கள் வெளியிடங்களில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில் குவிந்தனர்.

இதேபோல் பல கூட்டுறவு சங்கங் களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பதிவுசெய்ய மறுத்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து கூட்டுறவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நாட்ட ரசன்கோட்டை கூட்டுறவு சங்கச் செயலர், காளையார்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைக்கு சென்றதால் மூடப்பட்டிருந்தது. அவர் வந்ததும் திறக்கப்பட்டது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE