குழந்தைகள் தின விழாவையொட்டி, கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறுவனர் மணி பரிசு வழங்கினார்.கிருஷ்ணகிரி பாரத் பள்ளியில் குழந்தைகள் தினவிழா :

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.

விழாவில், கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்து பள்ளி நிறுவனர் மணி பேசும்போது, மறைந்த பிரதமர் நேருவின் பிறந்தநாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம் என்றும், அவர் மாணவர்களிடம் காட்டிய அன்பும், பண்பும், அறநெறி பற்றியும் கூறினார். மேலும், இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எதிர்காலத்தில் சமுதாயத்துக்கு சிறப்பான சேவைகள் செய்ய வேண்டும் என்றார்.

இதையொட்டி, குழந்தை களுக்கு பேச்சு, கட்டுரை, மாறுவேடம், கையெழுத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிறுவனர் மணி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழா முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதலவர் நசீர்பாஷா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE