தயார் நிலையில் மீட்புப் படை வீரர்கள் : நெல்லை மாநகர துணை காவல் ஆணையாளர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து பேரிடர் மீட்புப் படையினர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பயிற்சி முடித்து தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படையிர், ஊர்க்காவல் படையினர் 100 பேர் நெல்லையில் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை காப்பாற்ற அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க தேவையான இடங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வெள்ளம் வந்தால் மக்களை காப்பாற்ற, மீட்புப் பணிக்கு காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது . தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். திருநெல்வேலி மாநகர பகுதியில் 17 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆற்றுப்படுகைகளில் இதுவரை வெள்ளம் சூழவில்லை. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சமாளிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் 17 இடங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்