இருளர் சமூக மக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

தி.மலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 25 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கியுள்ளது.

இந்நிலையில், திருவண்ணா மலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழையால், கால்வாயில் இருந்த கழிவுநீரும் மழைநீருடன் வெளியேறி, குடியிருப்புகளில் நேற்று முன் தினம் இரவு புகுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட இருளர் சமூக மக்கள், திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கழிவுநீர் கால்வாய் சீரமைத்து, சாலை மற்றும் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, வருவாய் மற்றும் காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலை – தண்டராம்பட்டு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்