ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 8-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 8-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பெரிய தெரு, தொரப்பாடி ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொண்டீர்களா ? என கேட்டு தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 21 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 17,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்