ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வத்தல் வியாபாரியை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகவேல். மிளகாய் வத்தல் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரிடம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அப்துல்முனாப் (45) மிளகாய் வத்தல்களை வாங்கி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு 7,022 கிலோவத்தல்களை வாங்கிய அப்துல் முனாப், அதற்காக ரூ.9 லட்சத்து 59 ஆயிரத்தைமுருகவேலுக்கு கொடுக்க வேண்டியிருந்தது.
இதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் அப்துல்முனாப் கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.8 லட்சத்துக்குகாசோலையை கொடுத்துள்ளார். அதேபோல் தொடர்ந்து அப்துல் முனாப், பலமுறை மிளகாய் வத்தல்கள் பெற்று காசோலைகளை கொடுத்துள்ளார்.
முருகவேல் உட்பட 6 பேரிடம் ரூ. 45 லட்சத்து 33 ஆயிரத்துக்கு காசோலையைகொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பிவிட்டது.
இதையடுத்து முருகவேல், அப்துல் முனாபிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், திருப்பூர் மாவட்டகுற்றப்பிரிவு போலீஸாரிடம் முருகவேல் புகார் அளித்தார். தொடர்ந்து, அப்துல்முனாப் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago