சென்னையில் மீட்பு பணிக்குச் சென்ற கிருஷ்ணகிரி நகராட்சி, தீயணைப்பு ஊழியர்கள் :

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் ஏராளமான பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளுக்காகவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சென்னை சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் துப்புரவு ஆய்வாளர் னிவாசன் தலைமையில் களப்பணி உதவியாளர் முருகன் மற்றும், 10 தூய்மைப் பணியாளர்கள் தேவையான உபகரணங்களுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 9-ம் தேதி கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான, 19 தீயணைப்பு வீரர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதிக்குச் சென்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம், ஜீப், படகு மற்றும் நீர் இறைக்கும் பம்பு உள்ளிட்டவைகளுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இதேபோல மின்வாரிய துறையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசின் உத்தரவு வந்தவுடன் மீட்பு பணிகளுக்கான பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE