காஞ்சிபுரம் மாவட்டத்தில் : 8-வது மெகா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

காஞ்சி ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனாவை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில், கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசியும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மூலமாக கோவிஷுல்டு தடுப்பூசியும் போடப்படுகிறது.

முதல் தவணை செலுத்தி, இதுவரை 2-வது தவணைதடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 1,17,103 பேர்மாவட்டத்தில் உள்ளனர். மேலும் நவ.14-ம் தேதி நடைபெற உள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் இந்த மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனாவை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே. எனவே, 2-வது தவணை நிலுவையில் உள்ள பயனாளிகளும், முதல் தவணை நிலுவையில் உள்ள பயனாளிகளும், நவ. 14-ம் தேதி (இன்று) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்