வட கிழக்கு பருவ மழைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து வருகின்றனர். பயிர் பாதிப்பு கணக்கீடு தொடர்பாக, பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுப்பட்டிருந்தால், நிலம் தொடர்பான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் வழங்க வேண்டும். அவை பின்னர் கள ஆய்வுகள் செய்யப்பட்டு, பயிர் பாதிப்பு கணக்கீடு மேற்கொள்ளப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago