அமைச்சர் பொன்முடி மீதான - சொத்து குவிப்பு வழக்கில் மேலும் 4 சாட்சிகளிடம் விசாரணை :

By செய்திப்பிரிவு

அமைச்சர் பொன்முடி மீதானசொத்து குவிப்பு வழக்கு வரும் 15-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டுவிழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக மொத்தமுள்ள 228 சாட்சிகளில் இதுவரை 134 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.இந்நிலை யில் நேற்று மேலும் 4 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கை நாளை மறுநாள் (15-ம் தேதிக்கு) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்