திருப்பத்தூரில் சாலை விரிவாக்கத் தின்போது கால்வாய்கள் மூடப் பட்டதால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்தூர் நகரைச் சுற்றிலும் உள்ள கருப்பூர், கோட்டையிருப்பு, கீழசிவல்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் திருப்பத்தூர் நகரில் உள்ள பணியாரேந்தல், பாப்பாங் கண்மாய், தென்மா கண்மாய் உள்ளிட்ட 6 கண்மாய்கள், சாம்பான் ஊருணி, மருதாண்டி ஊருணி, தம்மம் ஊருணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதற்கு கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்படாததும், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு, நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் கால்வாய் மறைப்பு போன்றவை காரணமாக உள்ளன. கால்வாய் களை சீரமைத்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago