திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர் - :

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார். மொத்தமுள்ள 16 கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக ஒன்றியத் தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட் டுள்ளது.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக கூட்டணி 9 இடங்கள், திமுக கூட்டணி 7 இடங்களை கைப்பற்றின. இதையடுத்து அதிமுகவே தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்றி யது. தற்போது முனியாண்டி தலை வராக உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அதிமுக கவுன்சிலர் பெரும்பச்சேரி முருகன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் சண்முகம், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

2 அதிமுக கவுன்சிலர்கள் இணைந்ததால் தற்போது திமுகவின் பலம் 9 ஆகவும், அதிமுகவின் பலம் 7 ஆகவும் குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம்.

இந்நிலையில் மேலும் சில அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணையத் தயாராகி வருகின்றனர். இதனால் ஒன்றியத் தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அதிமுக வசம் இருந்த சிவகங்கை ஒன்றியம் திமுக பக்கம் சென்ற நிலையில், இளையான்குடி ஒன்றியமும் திமுக பக்கம் செல்ல இருப்பது அதிமுக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்