சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (13-ம் தேதி), நாளை 14-ம் தேதி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம், கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரப்படி, 01.01.2022 தேதியினை மைய நாளாகக்கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து நாளதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 30-ம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற உள்ளது.
இச்சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக இன்று (13-ம் தேதி), நாளை (14-ம் தேதி) மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் தங்கள் பெயரை சேர்க்க உரிய படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்பதையும், பிழைகள் மற்றும் திருத்தங்கள் உள்ளதா என்பதையும், வேறு தொகுதிக்கு அல்லது ஒரே தொகுதிக்குள் முகவரி விட்டு முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்களும், தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக் கப்பட்ட அதற்கான படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து, முகாமிலோ அல்லது வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம்.
மேலும் www.nvsp.in இணையதள முகவரி வழியாகவும் அல்லது Voters Helpline செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1950 என்கிற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago