தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழுவினர் நேற்று வந்தனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத் தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் கலந்தாய் வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கம் தென் னரசு, பெரியகருப்பன், ரகுபதி, சக்கரபாணி, மகேஸ் பொய்யா மொழி, மெய்யநாதன் மற்றும் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் மற்றும் வேளாண் மைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்வது, பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது, சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியை துரிதப் படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்வது குறித்து விவாதிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத் தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், திருவாரூர் மாவட் டம் திருவாரூர் அருகே கண் கொடுத்தவணிதம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டனர். அவர்களிடம், பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் விளக்கினர்.
பின்னர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அருந்த வம்புலத்தில், மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் குழு வினர் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் ஆறு, குளம், ஏரி தூர்வாரப்படவில்லை. முகத் துவாரம் தூர்வாரப்படாத காரணத் தால், மழைநீரை கடலுக்கு இழுக்கும் சக்தி குறைந்ததால் தற்போது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினை இல்லாதவாறு திமுக அரசு புதிதாக திட்டம் தீட்டி, அதற்கான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ற படி, நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago