திருவள்ளூர் மாவட்டத்தில் - 1,138 குளம், ஊரணிகள் 378 ஏரிகள் நிரம்பின :

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 378 ஏரிகள், 1,138 குளம், ஊரணிகள் நிரம்பியுள்ளன.

மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து, நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,155 ஏரிகளில் 378 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள 324 ஏரிகளில் 88 ஏரிகளும், ஆரணி ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள 250 ஏரிகளில் 153 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல, ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 137 ஏரிகளும், 3,296 குளம், ஊரணிகளில், 1,138 குளம், ஊரணிகளும் நிரம்பியுள்ளன.

அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 324 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 193 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும் நிரம்பியுள்ளன. அதேபோல, குளம், ஊரணிகளில் 1,287 குளம், ஊரணிகளில் 75 சதவீதத்துக்கும் மேலாகவும், 559 குளம், ஊரணிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE