திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் - தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் விரைவு ரயில்கள் தாமதம் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றன.

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், திருவள்ளூர் அருகேயுள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் இருந்த இலவ மரம் வேரோடு சாய்ந்து, விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் விழுந்தது. இதில், ரயில்வேயின் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

இதையடுத்து, அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் சென்ற விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் அவை மின்சார ரயில் பாதைகளில் இயக்கப்பட்டன.

தொடர்ந்து, வேப்பம்பட்டு ரயில் நிலையம் சென்ற ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, மின் கம்பிகளை மாற்றினர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு அந்த தண்டவாளத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்