- வைகை அணை உபரி நீரை நிலையூர் கால்வாயில் திறந்துவிட வலியுறுத்தல்ஆட்சியரிடம் விவசாயிகள் மனு :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் வைகை அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கடலில் கலக்காமல் தடுக்கும் வகையில், மதுரை மாவட்ட பிரதான இணைப்பு கால்வாயான நிலையூர் கால்வாய் மற்றும் தெற்கு ஆறுகளில் தண்ணீரைக் கொண்டு வந்தால் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, கம்பிக்குடி, பாப்பணம், சூரனூர், தாமரைக்குளம், தோப்பூர், சித்து மூன்றடைப்பு, அள்ளிக்குளம், ஆத்திக்குளம், கீழ் உப்பிலிக்குண்டு, புதுப்பட்டி போன்ற கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் மீண்டு விவசாயம் செழிக்கும். எனவே ஆட்சியரும், பொதுப்பணித் துறை குண்டாறு வடிநிலச் செயற்பொறியாளரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்