பருவமழை பெய்து வருவதால் ஈரோட்டில் தொடர்ந்து காய்ச்சல் முகாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் பருவமழை தொடர்வதையொட்டி, மாவட்டம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த பெரிய செட்டிப்பாளையத்தில் சிறப்பு காய்ச்சல் முகாம் நேற்று நடந்தது. முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நோய் தடுப்புப் பணிகள் மற்றும் சிறப்பு காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி கூறியதாவது:

பருவமழைக் காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீரினைத் தேங்க வைக்கக் கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கொசு ஒழுப்புப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பருவமழை தொடர்வதால், சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும், என்றார்.

இதனைத் தொடர்ந்து மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவினை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்