தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, தமிழிசை விழா மற்றும் இசைப்பள்ளியின் 23-வது ஆண்டு விழா ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்து, இசை, விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தமிழிசை விழா நடத்தியமைக்காக கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் ஆட்சியர் பேசிய தாவது: தூத்துக்குடி மாவட்டம் இசைத்துறையில் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக திகழ்கிறது. இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள், சங்கரதாஸ் சுவாமிகள், முத்து சுவாமி தீட்சிதர் ஆகியோர் பிறந்த மாவட்டம் என்பது அனை வருக்கும் பெருமை.
எளிய மக்களுக்கும் கருத்துக் களை கொண்டு செல்லும் சிறந்த கருவியாக நாடகங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு திறந்தவெளி கலையரங்கம் வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தேவை யான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக தமிழிசை விழாவில் நாதசுரம் தர்மலிங்கம், மு.கணேசன், தவில் சு.மாரியப்பன், சு.மந்திர மாரியப்பன் குழுவினர் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கு.சுப்பிரமணியன் ஓதுவார் குழுவினரின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டிச்சேரி சிவாஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டியமும் நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் வ.கோபாலகிருஷ்ணன், இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மு.சிவகாமசெல்வி, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், தூத்துக்குடி பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் இசை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago