தூத்துக்குடி மாவட்டத்தில் - 109 குளங்கள் முழு கொள்ளளவை எட்டின :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி பாசனத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 639 குளங்கள் உள்ளன. இதில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தமுள்ள 53 குளங்களில் நேற்றைய நிலவரப்படி 48 குளங்கள் 100 சதவீதம் நிரம்பிவிட்டன. மீதமுள்ள 5 குளங்களும் நிரம்பும் தருவாயில் உள்ளன.

கோரம்பள்ளம் வடிநிலத்தில் உள்ள 54 குளங்களில் 15 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. மீதமுள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் வைப்பார் வடிநில கோட்டத்தில் உள்ள 123 குளங்களில் பெரும்பாலான குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 409 ஊராட்சிக் குளங்கள் உள்ளன. இவற்றில் 46 குளங்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. 91 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேலும், 111 குளங்களில் 50 சதவீதத்துக்கு மேலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. 137 குளங்களில் 25 முதல் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. 24 குளங்களில் மட்டுமே 25 சதவீதத்துக்கு குறைவாக தண்ணீர் உள்ளது.

ஆறுகள், ஓடைகளில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் மாவட்டத்தில் அனைத்து குளங்களும் இந்த ஆண்டு முழுமையாக நிரம்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். குளங்கள், ஏரிகள் நிரம்பியதை தொடர்ந்து விவசாயிகள் உற்சாகமாக சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்